Tamil Nadu Bypoll Result: தாராபுரத்தில் டஃப் ஃபைட்.. முன்னேறிய திமுக- பின்னேறிய அதிமுக..!
Tamil Nadu Bypoll Result: தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 3- நாம் இடத்தில் இருந்து வந்த திமுக 2- ஆம் இடத்துக்கு முன்னேறிய நிலையில், அதிமுக 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுக 3- ஆம் இடத்தில் இருந்து வருகிறது.
தமிழகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 31,327 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 2- ஆம் இடத்தில் இருந்து வந்த அதிமுக வேட்பாளர் பானுமதி 24 ஆயிரத்து 363 வாக்குகளுடன் 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 3- ஆம் இடத்தில் இருந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சுகன்யா 25 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று 2- ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால், தாராபுரம் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக- திமுக இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆரவாரம்
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார். 2- ஆவது இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இருந்து வந்தார். இவர்களுக்கான வாக்குகள் வித்தியாசம் 2112 என இருந்தது. ஆனால், அடுத்தடுத்து நடைபெற்ற சுற்றுகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை பெற்றதுடன், அதிமுக வேட்பாளர் பானுமதி 2- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால், அதிமுகவினர் சற்று சோர்வடைந்தனர். தமிழக வெற்றி கழகத்தினர் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!
தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தவெக
முன்னதாக, இந்த தொகுதியில் அதிமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், 2- ஆம் இடத்தில் இருந்த அதிமுக எதிர்பாராத விதமாக 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 3- ஆம் இடத்தில் இருந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சுகன்யா முன்னேறி 2- ஆம் இடத்துக்கு வந்துள்ளார்.
தாராபுரத்தில் தவெக – திமுக இடையே தான் போட்டியே
இதன் மூலம் தாராபுரம் தொகுதியில் தவெக- திமுக இடையே தான் போட்டி என்ற நிலை நிலை மாறி உள்ளது. இந்த தொகுதியிலும், மதுராந்தகத்திலும் அதிமுக 3- ஆம் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தாராபுரத்தில் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 37 ஆயிரத்து 944 ( 21.16 சதவீதம்), திராவிட முன்னேற்ற கழகம் 31,043 ( 17.31%) அதிமுக 26 ஆயிரத்து 256 ( 14.65 சதவீதம்), நாம் தமிழர் கட்சி 2,499 வாக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 611 வாக்குகள் பெற்றுள்ளது. அடுத்தடுத்து எண்ணக்கூடிய சுற்றுகளில் இந்த நிலை மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: அதிமுக எப்படியாது வெற்றி பெறணும் அம்மா.. எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலை முன் தொண்டர்கள் தவம்.. என்ன நடக்கப்போகிறது!