AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை.. நடந்தது என்ன?

Madurantakam By-Election: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக எழுந்த புகாரால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின் செங்கல்பட்டு எஸ்பி மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து முகவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மதுராந்தகத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை.. நடந்தது என்ன?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Oct 2026 13:52 PM IST

செங்கல்பட்டு, அக்.09: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் திடீர் பரபரப்பும் சலசலப்பும் நிலவியது. வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும், பெட்டிகளின் சீல்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றும் அரசியல் கட்சி முகவர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், காவல்துறை உயராதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனடியாகத் தலையிட்டு முகவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்துச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: Tamil Nadu Bypoll Result: தாராபுரத்தில் டஃப் ஃபைட்.. முன்னேறிய திமுக- பின்னேறிய அதிமுக..!

இயந்திரக் கோளாறு, சீல் முறைகேடு புகார்கள்:

மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பல்வேறு மேசைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. காலை முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது 11-வது மேசையில் எண்ண வைக்கப்பட்ட இயந்திரத்தின் திரையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த வாக்குகள் எண்ணப்படாமல் தனியாக எடுத்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 71-வது வாக்குப்பெட்டியிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதுடன், 120-வது வாக்குப்பெட்டி உட்பட சில பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சீல்கள் மற்றும் அட்டைகள் சரியாக இல்லை என்று அதிமுக மற்றும் திமுக முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். தொடர்ந்து இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று முகவர்கள் சந்தேகம் எழுப்பிக் கூச்சலிட்டதால் வாக்கு எண்ணிக்கை இடைநிறுத்தப்பட்டது.

காவல்துறை எஸ்பி மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு:

வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல் குழப்பம் அதிகரித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கூச்சலிட்ட முகவர்களைச் சீர்படுத்தி வெளியேற்றியதுடன், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீரப்பன் நேரில் வந்து நிலவரத்தைக் கண்காணித்தார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பிரத்தியேகமாகப் பேசிய எஸ்பி ஐமன் ஜமால், “முகவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் ஆட்சேபனைகளுக்குப் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாகச் சட்டப்படி உரிய பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்டன. விளக்கங்களைக் கேட்டு அனைத்து முகவர்களும் திருப்தியடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கப்பட்டுத் தடையின்றி நடைபெற்று வருகிறது” என்று உறுதியளித்தார்.

இதையும் படிக்க: Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!

முன்னிலையில் தவெக மரகதம் குமரவேல்:

வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தருணத்தில், மதுராந்தகம் தொகுதியில் 9 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் 31,127 வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தற்போது அனைத்துச் சலசலப்புகளும் முடிவுக்கு வந்து 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருவதால், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Follow Us