AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இரு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி முகம்.. ஆரவாரமின்றி காத்து வாங்கும் திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள்!

Madurantakam- Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில் தொடர் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் இல்லாமல் கட்சியின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன .

இரு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி முகம்.. ஆரவாரமின்றி காத்து வாங்கும் திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள்!
வெறிச்சோடிய கட்சி அலுவலகங்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Oct 2026 14:22 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் பதிவான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இரு தொகுதிகளில் எண்ணப்படும் வாக்குகள் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் ( மதுராந்தகம் தொகுதி) சத்யபாமா ( தாராபுரம் தொகுதி) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். 2- ஆவது இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் பரந்தாமன் ( மதுராந்தகம் தொகுதி), சுகன்யா ( தாராபுரம் தொகுதி), 3- ஆவது இடத்தில் அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத் ( மதுராந்தகம் தொகுதி), பானுமதி ( தாராபுரம் தொகுதி), இருந்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தொடர் முன்னிலை

இந்த இடைத் தேர்தலில், ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக தேர்தல் பணி ஆற்றின. அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. ஆனால், இடை தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Tamil Nadu Bypoll Result: தாராபுரத்தில் டஃப் ஃபைட்.. முன்னேறிய திமுக- பின்னேறிய அதிமுக..! முழு விவரம்!

திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் வெறிச்சோடின

இதனால், மதுராந்தகம், தாராபுரம் தவெகவின் வசம் செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் கட்சியினர் ஆகியோர் உற்சாகம் இழந்துள்ளனர். இதன் வெளிப்பாடாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், டி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பனையூர் தவெக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து ஆரவாரம்

இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எந்தவித ஆரவாரமும் செய்யாமல் உள்ளனர். இதனால், மேற்கண்ட கட்சி அலுவலகங்கள் கலை இழந்து காணப்படுகிறது. இதே போல, பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Tamil Nadu Bypoll Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை… கூட்டணி கட்சிகள் ஆதரவு இன்றி தனித்து 2- ஆம் இடம்… மாஸ் காட்டி வரும் திமுக!

Follow Us