AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘டீசலுக்குக் கூட காசில்லை’.. இலவச பேருந்து சேவையால் வாழ்வாதாரம் இழப்பு.. தனியார் பஸ் தொழிலாளர்கள் வேதனை!

TVK Vetri Payanam Free Bus Scheme: தவெக கட்சியின் 'வெற்றி பயணம்' இலவச பேருந்து சேவையால் நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்துகளின் வசூல் கடுமையாகச் சரிந்து, ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பெரும் மன உளைச்சலுக்கும் வாழ்வாதாரப் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். பேருந்து நடைப்பயணத்தை நிறுத்தும் அளவிற்கு வசூல் குறைந்ததால் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘டீசலுக்குக் கூட காசில்லை’.. இலவச பேருந்து சேவையால் வாழ்வாதாரம் இழப்பு.. தனியார் பஸ் தொழிலாளர்கள் வேதனை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Oct 2026 13:33 PM IST

அக்டோபர், 09: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் கொண்டுவரப்படும் மக்கள் நலத் திட்டங்கள் ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மற்றொரு புறம் அதுவே குறிப்பிட்ட சில தரப்பினரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெற்றி பயணம்’ இலவச பேருந்து சேவை திட்டத்தால் நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளின் வசூல் படுபாதாளத்திற்குச் சரிந்துள்ளது. நாள்தோறும் பேருந்துகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, “ஏன்டா இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டோம்” என்று கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: குடிநீரில் ஆபத்தான உப்புத் தன்மை.. சிறுநீரக கோளாறால் அவதியுறும் கிராம வாசிகள்..

படுபாதாளத்திற்குச் சரிந்த தினசரி வசூல்:

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களும் பொதுமக்களும் இலவச பேருந்து சேவையையே பெரிதும் நாடுகின்றனர். வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை வசூலாகும் தனியார் பேருந்துகளில், தற்போது ரூ.8,000 அல்லது ரூ.3,800 கூடக் கிடைப்பது அரிதாகிவிட்டது. பேருந்து நிலையங்களில் தவெக-வின் இலவச பேருந்துகள் வரிசையாக நிற்பதால், பயணிகள் அனைவரும் அதில் ஏறிச் செல்கின்றனர். இதனால், நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை ஒரு பயணி கூட இல்லாமல் தனியார் பேருந்துகள் காலியாகச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

ஓட்டுநர்களின் மன உளைச்சல்:

பேருந்தில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்ததால், டீசலுக்குத் தேவையான தொகையைக் கூட ஈட்ட முடியாமல் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கவலையடைந்துள்ளனர். சில சமயங்களில் ஓட்டுநர்கள் தங்களின் சொந்தக் கைக்காசைப் போட்டோ அல்லது உரிமையாளர்களிடம் கடன் வாங்கியோ டீசல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்தில் ஒரு சீட்டில் கூட பயணி இல்லாததால், ‘ட்ரிப் லாஸ்’ செய்து பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் தினசரி படிக் காசு மற்றும் சம்பளம் இன்றி ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிக்க: ஏடிஎம் கொள்ளைக்கு ‘சிறப்பு பயிற்சி’ வகுப்புகள்.. வடமாநிலக் கும்பலின் பகீர் பின்னணியைக் கண்டறிந்த தமிழ்நாடு போலீஸ்!

மாற்றுத் தீர்வும் அரசுக்குக் கோரிக்கையும்:

அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து ஊழியர்கள் தினசரி வசூலையே நம்பியுள்ளனர். எனவே, இலவசப் பேருந்து வசதியை ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்காமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் வழங்கினால் ஆண்களும் பெண்களும் பயனடைவதுடன், தனியார் பேருந்து ஊழியர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று ஊழியர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசும் முதல்வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் கண்ணீருக்குச் செவிசாய்த்துத் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என்றும் வேதனையுடன் எச்சரித்துள்ளனர்.

Follow Us