AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏடிஎம் கொள்ளைக்கு ‘சிறப்பு பயிற்சி’ வகுப்புகள்.. ‘பாஸ்’ பண்ணாதான் கொள்ளை.. வடமாநிலக் கும்பலின் பகீர் பின்னணியைக் கண்டறிந்த தமிழ்நாடு போலீஸ்!

TM Robbery Gang Trained: ஏடிஎம் இயந்திரங்களைச் சேதப்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் வடமாநிலக் கொள்ளைக் கும்பலைத் தமிழ்நாடு காவல் துறை 'திரில்லர்' பாணியில் அதிரடியாகக் கைது செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் நிஜ ஏடிஎம் இயந்திரங்களைக் கொண்டு கொள்ளைப் பயிற்சிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சியடைபவர்களை மட்டுமே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடச் செய்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

ஏடிஎம் கொள்ளைக்கு ‘சிறப்பு பயிற்சி’ வகுப்புகள்.. ‘பாஸ்’ பண்ணாதான் கொள்ளை.. வடமாநிலக் கும்பலின் பகீர் பின்னணியைக் கண்டறிந்த தமிழ்நாடு போலீஸ்!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Oct 2026 11:06 AM IST

அக்டோபர், 09: தமிழ்நாட்டில் வங்கிகளின் ஏடிஎம் (ATM) மையங்களை இலக்கு வைத்து கேஸ் கட்டர்கள் மூலம் இயந்திரங்களை வெட்டி எடுத்து கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காவல் துறை நடத்திய அதிரடி விசாரணையில் சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையிலான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கி வந்த மிகப்பெரிய கொள்ளைக் கும்பல் ஒன்றைத் தமிழ்நாடு தனிப்படை போலீஸார் ‘திரில்லர்’ பாணியில் பின்னடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். இக்கும்பல் சாதாரணமான முறையில் குற்றங்களில் ஈடுபடாமல், மிகத் திட்டமிட்டு தொழில்முறைப் பயிற்சி பெற்றுத் தொழில்முறை குற்றவாளிகளாகச் செயல்பட்டிருப்பது காவல் துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: நீலகிரியில் பரிதாபம்.. கார் மீது உருண்டு விழந்த ராட்சத பாறை.. மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்!

பயிற்சி முகாம்களும் தேர்ச்சிப் பரிசோதனைகளும்:

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரங்களை எப்படி விரைவாக உடைப்பது என்பது குறித்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்களைச் செயலிழக்கச் செய்வது, கேமராக்கள் மீது கெமிக்கல் ஸ்ப்ரே அடிப்பது, அலாரம் அடிக்காமல் தடுப்பது, கேஸ் கட்டர் கருவிகளைப் பயன்படுத்திச் சில நிமிடங்களிலேயே எஃகு பெட்டிகளை வெட்டி எடுப்பது போன்ற நுணுக்கங்கள் பயிற்சிகளாகக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயிற்சியின் முடிவில் வைக்கப்படும் சோதனையில் ‘பாஸ்’ ஆகும் நபர்களை மட்டுமே நேரடி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா ‘கொள்ளைப் பள்ளி’பின்னணி:

காவல் துறையின் ஆழமான விசாரணையில், ஹரியானா மாநிலத்தின் நூ, பல்வால் மற்றும் மேவாட் ஆகிய பகுதிகளில் இத்தகைய ஏடிஎம் ‘கொள்ளைப் பள்ளிகள்’ ரகசியமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய அல்லது கழிவு செய்யப்பட்ட நிஜ ஏடிஎம் இயந்திரங்களை மாதிரியாக வைத்து, அவற்றில் போலி பணத்தாள்களை நிரப்பி, கேஸ் கட்டர் மூலம் பணப் பெட்டியைப் சேதப்படுத்தாமல் எத்தனைக் குறைந்த நிமிடங்களில் பணத்தைக் கைப்பற்ற முடிகிறது என்பதே அவர்களின் பிரதான தேர்வாக இருந்துள்ளது. இதில் சிறப்பாகச் செயல்படும் நபர் ஒரு குழுவின் தலைவனாக நியமிக்கப்பட்டு, நான்கு பேர் கொண்ட சிறு படைகளாக நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், கொள்ளையடித்து வரும் பணத்தின் ஒரு பகுதியைத் தங்களது கிராமங்களுக்கு வழங்குவதால், உள்ளூர் மக்களின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்து வந்துள்ளது.

இதையும் படிக்க: சுங்கத்துறையிடம் சிக்கிய லேண்ட் க்ருசர்.. ஆதவ் அர்ஜூனா நிறுவனத்திடம் ரூ.2.60 கோடி மோசடி.. சிக்கிய கர்நாடக இடைத்தரகர்!

தமிழ்நாடு போலீஸின் அதிரடி வேட்டை:

தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுச் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமான சான்றுகள், சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை வைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீஸார், பிற மாநிலங்களுக்குச் சென்று இக்கும்பலின் முக்கியத் தலைவர்களையும் கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கும் இத்தகைய சர்வதேச பாணி கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் பிடிக்கத் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Follow Us