ATM-ல் பணம் கைக்கு வராமலே கணக்கில் டெபிட் ஆகிவிட்டதா?.. RBI-ன் இந்த விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
What To Do If Money Debited From ATM | நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது பணம் வெளியே வராமல், வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் டெபிட் செய்யப்பட்டால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலமே மேற்கொள்கின்றனர். இருப்பினும் சில தேவைகளுக்காக கையில் பணம் வைத்து செலவு செய்ய வேண்டிய சூழலும் உள்ளது. எனவே தான் பலரும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களுக்கு சென்று பணத்தை எடுக்கின்றனர். அவ்வாறு ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது சந்திக்கும் ஒரு மிகப்பெரிய சவால் ஒன்று உள்ளது. அதுதான், கையில் பணம் கிடைக்காமலே வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்படுவது. இந்த நிலையில், இத்தகைய சூழலை நீங்கள் எதிர்க்கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும், அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank Of India) விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணம் கைக்கு வராமலே கணக்கில் டெபிட் ஆகிவிட்டதா?
நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது பணம் கைக்கு வராமல் வங்கி கணக்கில் டெபிட் ஆகிவிட்டதா கவலையே வேண்டாம். காரணம், இந்திய ரிசர்வ் வங்கியின் டர்ன் அரவுண்ட் டைம் (Turn Around Time) விதியின்படி, ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் வராமல் வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டால் அடுத்த 5 நாட்களுக்குள்ளாக வங்கி அந்த பணத்தை வரவு வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: 5.50% ஆக அதிகரித்தது ரிசர்வ் வங்கி




தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 கட்டணம்
ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை, வங்கி 5 நாட்களுக்குள் வரவு வைக்கவில்லை என்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ.100 கூடுதலாக வங்கி உங்களுக்கு தர வேண்டும். இந்த தொகையும் தானாகவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக வங்கியில் எந்தவித கோரிக்கை கடிதத்தையோ தர வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க : EPFO : எம்டிஆர் கட்டணத்தை கண்டு அஞ்சும் பொதுமக்கள்.. உண்மையில் சிக்கல் யாருக்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதற்கு பின்னால் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அதாவது, பணம் வெளியே வராமலே வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்படும்போது, ஏடிஎம்-ல் இருக்கும் சென்சார் மூலம் வங்கிக்கு தகவல் சென்றுவிடும். இதன்படி தான், தானாகவே வங்கிகள் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைக்கின்றன.