AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆதார் பெயர் திருத்தம், மாற்றம்.. விதிகளில் முக்கிய மாற்றம் செய்த UIDAI.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

UIDAI Updates Rules for Changes | ஆதார் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கான விதிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில முக்கிய விதி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் பெயர் திருத்தம், மாற்றம்.. விதிகளில் முக்கிய மாற்றம் செய்த UIDAI.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Oct 2026 12:54 PM IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. அதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாகவும், மற்ற ஆவணங்களுடம் பொருந்தும் அளவுக்கு துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தான் ஆதாரில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை திருத்தம் செய்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஆதாரில் பெயரை திருத்தம் செய்வதற்கான விதிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அது என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் பெயர் திருத்தம் – விதிகளில் முக்கிய மாற்றம்

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இனி ஆதார் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் என்ன என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

சிறிய அளவிலான பெயர் திருத்தங்கள்

ஒரு நபரின் அடையாளம் மாறாமல் அவரது பெயரில் மேற்கொள்ளப்படும் சிறிய திருத்தங்கள் இதில் அடங்கும். குறிப்பாக Expanding Initials, Adding Middle Name, Sur Name மற்றும் சிறிய எழுத்துப்பிழைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த வகையான திருத்தங்களை மேற்கொள்ள Proof Of Identity சமர்ப்பிக்க வேண்டும்.

தரவு உள்ளீட்டு தவறு

ஆதாரில் ஏற்கனவே சமர்ப்பித்த ஆவணங்களில் பெயர் சரியாக இருந்தாலும், தரவுகளை உள்ளீடு செய்யும்போது தவறாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு தனி நடைமுறை உள்ளது. இந்த வகையான திருத்தங்களுக்கு பெரியவர்கள் Annexure B பிரமாண பத்திரத்துடன் அடையாள சான்று அல்லது உறவுமுறை சான்று வழங்க வேண்டும். இதுவே பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் என்றால் Annexure C பிரமாண பத்திரத்துடன் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : தங்கம் குறித்த ஷாக் கணிப்பை வெளியிட்ட Bank Of India.. என்ன தெரியுமா?

திருமணம் மற்றும் விவகாரத்துக்கு பிறகான திருத்தங்கள்

திருமணம் அல்லது விவாகரத்துக்கு பிறகு தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்பும் பெண்களுக்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது அவர்கள், Annexure D பத்திரத்துடன் அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிரமாண பத்திரம் திருமணம் அல்லது விவாகரத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதையும், அது தனி நபரின் அடையாளத்தை மாற்றவில்லை என்பதையும் உறுதி செய்கிறது.

எளிய திருத்தங்கள்

சிறிய திருத்தங்களுக்கு எந்த வகையான ஆதார ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

Follow Us