AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளியின்போது தங்கம் விலை குறையுமா, உயருமா?.. கணிப்புகள் கூறுவது என்ன?

Will Gold Price Increase Or Decrease For Diwali | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவில் உள்ளது. இந்த நிலையில், தீபாவளியின்போது தங்கம் விலை குறையுமா, உயருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளியின்போது தங்கம் விலை குறையுமா, உயருமா?.. கணிப்புகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Oct 2026 11:02 AM IST

தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது விழாக்கலாம் மற்றும் திருமண சீசனும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான், இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வர உள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களின்போது பொதுமக்கள் மத்தியில் நகை வாங்கும் வழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு (2026) தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை குறையுமா அல்லது உயர்வை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் சரிவில் தங்கம் விலை

2026 தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை அதன் பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், தற்போது தங்கம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது ஆண்டின் தொடக்கத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான், தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது உயர்வை சந்திக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!

தீபாவளிக்கு தங்கம் விலை உயருமா, குறையுமா?

செப்டம்பர் மாதம் முதலே தங்கம் விலை சற்று சரிவில் தான் உள்ளது. அக்டோபரிலும் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. இதே நிலை நீடித்து அக்டோபர் மாதம் முழுவதும் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வரும் பட்சத்தில் ஒரு சவரன் ரூ.1.05 லட்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதுவே செப்டம்பரில் தங்கம் விலை சரிவை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?

அதுமட்டுமன்றி, 2026 இறுதிக்குள் மேலும் ஒருமுறை தனது வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் மொத்த கவனமும் தங்கத்தின் மீது இருந்து திரும்பி, தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us