AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?

Gold and Silver Price In Chennai On October 01, 2026 | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Oct 2026 10:19 AM IST

சென்னை, அக்டோபர் 01 : சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (அக்டோபர் 01, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5  குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. இவ்வாறு நிலையற்ற தன்மை இல்லாமல் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை கொண்டு இருந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

ரூ.14,000-ல் இருந்து ரூ.13,000 ஆக குறைந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருவதன் காரணமாக ரூ.14,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் உயர்வுக்கு மத்தியில் நேற்று (செப்டம்பர் 30, 2026) உயர்வை சந்தித்த தங்கம், தற்போது மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 01, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,680-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,924-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,392-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், சவரனுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு சவரன் ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us