AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Chennai Gold Price : தங்கம் விலை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, நவம்பர் 17, 2026 இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. . அதன்படி, பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.99,760க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Nov 2026 11:06 AM IST

தங்கம் விலை (Gold Rate) கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, நவம்பர் 17, 2026 இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. . அதன்படி, பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.99,760க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை நவம்பர் 17, 2026 இன்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.190-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கம், டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. சென்னையில் நவம்பர் 15, 2026 நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 615க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 920க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 16, 2026 நேற்று கிராமுக்கு ரூ.75க்கும், பவுனுக்கு ரூ.600க்கும் குறைந்தது. அதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 540க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 320க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க : இனி 75% அல்ல 85%.. நகைக் கடனில் ஆர்பிஐ மேற்கொண்ட முக்கிய மாற்றம்!

இந்த நிலையில் தங்கம் விலை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, நவம்பர் 17, 2026 இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. . அதன்படி, பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் 99,760 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 குறைந்து ஒரு கிராம் 12,470 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நவம்பர் 17, 2026 இன்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கம், டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15அம் தேதி முதல் முறையாக தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து இந்த 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக ரூ.2 லட்சத்தை தொட்டு விடும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது. இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு 1 லட்சத்துக்கும் கீழ் தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஆன்லைனில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்!

அமெரிக்காவின் பணவீக்கப் புள்ளிவிவரங்கள், ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவு மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவை வரும் நாட்களில் தங்கச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும். வட்டி விகிதங்கள் உயரும் வாய்ப்பு வலுப்பெற்றால், தங்கம் தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். அதே சமயம், மத்திய வங்கியின் தங்கக் கொள்முதல், சர்வதேச பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பான நகரும் முதலீட்டாளர்களின் எண்ணம் ஆகியவையும் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us