AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

Baal Aadhaar Biometric Update | 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் தான், அந்த விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 கடைசி தேதி என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Sep 2026 16:43 PM IST

இந்தியாவில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், வயது, பாலினம் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric Details) இடம்பெற்றிருக்கும். ஆனால், சிறிய குழந்தைகளுக்கு அதாவது 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாமல் ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய இன்றே (செப்டம்பர் 30, 2026) கடைசி தேதியாக உள்ளது. எனவே, இன்று பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 முதல் 5 வயது குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு

1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கண் கருவிழி படலம், கை ரேகை உள்ளிட்டவை முழுமையாக இருக்காது. இதன் காரணமாக 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாத ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த ஆதார் கார்டில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போது இந்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய ஆதார் கார்டு கட்டாயமாக கோரப்படும்.

இதையும் படிங்க : அஞ்சலக RD திட்டம்.. மாத தவணைகளை தவறவிட்டால் என்ன ஆகும்?

இன்றுவரை மட்டுமே இந்த சேவை இலவசம்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், அது தொடர்பாக முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது, இன்று (செப்டம்பர் 30, 2026) வரை மட்டுமே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக புதிப்புத்துக்கொள்ள முடியும். நாளை (அக்டோபர் 01, 2026) முதல் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : Gold Price : 2வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிந்தது.. இன்றைய நிலவரம்!

காலக்கெடுவுக்கு பிறகு பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us