AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!

EPFO Nidhi Aapke Nikat 2.0 Camps | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்கள் இபிஎஃப்ஓ தொடர்பான விளக்கங்கள் மற்றும் சேவைகளை பெற இன்று முகாம் நடத்தப்படுகிறது.

இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Sep 2026 12:05 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அனைத்து சேவைகளும் ஆன்லைனிலேயே பெரும் வகையில், உழியர்கள் எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை. ஆனால், சில சேவைகளுக்கு ஆன்லைனில் தீர்வு கிடைக்காமல் ஏராளமான ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், ஊழியர்கள் இபிஎஃப்ஓவின் சேவைகள் மற்றும் தங்களது சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நிதி ஆப்கே நிகத் 2.0 (Nidhi Aapke Nikat 2.0) என்ற முகாமை அரசு இன்று (செப்டம்பர் 28, 2026) நடத்துகிறது. இந்த நிலையில், இந்த முகாமின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே இடத்தில் தீர்வு – சிறப்பு முகாமை நடத்தும் இபிஎஃப்ஓ

பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுப்பது, இருப்பு சோதனை செய்வது, நாமினி இணைப்பது உள்ளிட்ட அனைத்து செவைகளும் இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மிக சுலபமாக கிடைக்கிறது. ஆனால், ஒருசில காரணங்களால் சில ஊழியர்கள் சில சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பல ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், நிதி ஆப்கே நிகத் 2.0 கீழ் இந்த முகாமை நடத்த அரசு இந்த முக்கிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

முகாமின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த முகாமின் மூலம் ஊழியர்கள் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண முடியும். அதுமட்டுமன்றி, இபிஎஃப்ஓ அமைச்சகம் என்ன என்ன சேவைகளை வழங்குகிறது, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, சேவைகளை எப்படி பெறுவது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளது. ஊழியர்களின் சிக்கல்களை பொருத்து அவர்களுக்கு மிக விரைவில் இந்த முகாமில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us