அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?
Bank Strike From September 28, 2026 To 30, 2026 | வங்கிகள் நாளை (செப்டம்பர் 28. 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், யுபிஐ, செயலிகள் உள்ளிட்டவை செயல்பாட்டில் இருக்குமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
யுனைடட் ஃபோரம் பேங்க்ஸ் யூனியன் (UFBU – United Forum Banks Union) நாளை (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வார விடுமுறை இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், மீண்டும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் செயல்படவில்லை என்றால் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவர். இதன் காரணமாக தான் இன்று (செப்டம்பர் 27, 2026) பொதுத்துறை மற்றும் கிராம் வங்கிகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், நாளை முதல் செப்டம்பர் 30, 2026 வரை உள்ள மொத்த மூன்று நாட்களில், யுபிஐ (UPI – Unified Payment Interface), ஏடிஎம் (ATM – Automated Teller Machine) உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி பெற முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா? உண்மை என்ன?
அடுத்த மூன்று நாட்கள் – யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?
செப்டம்பர் 26, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவாகியுள்ள நிலையில், இந்த மூன்று நாட்களும் யுபிஐ, செயலிகள் மற்றும் ஏடிஎம் ஆகியவை செயல்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தடையின்றி சேவைகளை பெறலாம்
இந்த மூன்று நாட்கள் வங்கியில் மட்டுமே பெறக்கூடிய சேவைகளை மட்டும் தான் பெற முடியாது. அது தவிர யுபிஐ, வங்கிகளின் செயலிகள் மற்றும் ஏடிஎம் ஆகியவற்றை எந்தவித தடையுமின்றி பெற முடியும். யுபிஐ செயலிகள், வங்கிகளின் செயலிகள் மற்றும் ஏடிஎன் ஆகியவற்றை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
ஞாயிற்று கிழமையில் இயங்கும் வங்கி
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெற முடியாது என்ற நிலையில், இதர சேவைகளான யுபிஐ, வங்கி செயலிகள் மற்றும் ஏடிஎம் சேவைகளை எந்தவித தடையும் இல்லாமல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



