AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!

Sovereign to Hit 2 Lakh Rupees by 2027 | தங்கம் விலை ஒவ்வொரு ஆண்டும் நல்ல விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 2027 மார்ச் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Sep 2026 11:21 AM IST

கடந்த சில ஆண்டுகளாக தங்கம் (Gold) நல்ல விலை உயர்வை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கனிசமான விலை உயர்வை சந்திக்கும் தங்கம், உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், தங்கம் சாமானியர்கள் எட்டா கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான், தங்கம் விலை ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை தொடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

தங்கம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபத்தையே கொடுத்து வருகிறது. ஒரு வருடத்தில் சில தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்தாலும், அந்த ஆண்டின் முடிவில் நல்ல லாபத்தையே தங்கம் கொடுக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தங்கம் நல்ல விலை உயர்வை சந்தித்து வந்ததன் காரணமாக தற்போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ராயல் என்ஃபீல்டுடன் போட்டியிடும் டிவிஎஸ்.. ரோனின் மற்றும் ஹன்டர் வேறுபாடுகள் என்னென்ன?

கடந்த சில மாதங்களாக தங்கம் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காமல் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா, இல்லையா என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை குறித்த ஷாக் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் – சலானி

2027 ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தற்போது 18, 14 மற்றும் 9 காரட் தங்க நகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!

பொதுமக்கள் இந்த தங்க நகைகளை வாங்கி பயன்படுத்தலாம், இவற்றின் சந்தை மதிப்பு குறைவதில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us