கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!
40 Percentage Take New Loans to Repay Old | அவசர பண தேவைகளுக்கு கடன் வாங்குவது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவில் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்கும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பண தேவை ஏற்படும்போது அதனை பூர்த்தி செய்துக்கொள்ள கடன் வாங்குவது நியாயமானது தான். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்த மேலும் மேலும் கடன் பெறுவது தான் சிக்கலுக்கு வழிவகை செய்யும். இந்த கூற்றை கேட்கும்போது சற்று முட்டாள் தனமாக தோன்றும். ஆனால், சமீப காலமாக ஏராளமான இந்தியர்கள் இந்த முறையை தான் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக 40 சதவீதம் மக்கள் தங்களது பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் பழக்கம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறித்தும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
எக்ஸ்பர்ட் பேனல் தளம் வெளியிட்ட அறிக்கை
கடன் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடும் எக்ஸ்பர்ட் பேனல் என்ற தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடன் பெற்ற 40 சதவீதம் மக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் புதிய கடன் வாங்குவது தெரிய வந்துள்ளது. இதேபோல, ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க சிலர் கிரெடிட் கார்டுகளை பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.




இதையும் படிங்க : ஒரே சார்ஜில் 161 கி.மீ… ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!
என்ன என்ன தேவைகளுக்காக கடன் பெற்றுள்ளனர்?
இந்த நிலையில், மீதமுள்ள 60 சதவீத கடனை பொதுமக்கள் தங்களது மாத வருமானத்தின் மூலம் திருப்பி செலுத்தி வருகின்றனர். எக்ஸ்பர்ட் பேனல் தனது தளத்தில் கேட்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் 26 சதவீதம் மக்கள் தங்களது அவசர மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். 22 சதவீதத்தினர் திருமணம், உயர் கல்வி, குடும்பச் செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்காக கடன் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
தொழில் நஷ்டம் மற்றும் வேலை இழப்பு போன்ற சிக்கல்களை சமாளிக்க 18 சதவீதம் பொதுமக்கள் கடனை வாங்கியுள்ளனர். மேலும், தங்களது அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் 15 சதவீதம் மக்கள் கடனை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.