AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.4,000 பில்லை ரூ.2,000 ஆக பிரித்து செலுத்தினால் MDR இல்லையா?.. உண்மை இதுதான்

Can MDR Avoided By Splitting Bills | யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் பெறும் பண பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அது குறித்த முக்கிய கேள்வி ஒன்றுக்கு விடை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ரூ.4,000 பில்லை ரூ.2,000 ஆக பிரித்து செலுத்தினால் MDR இல்லையா?.. உண்மை இதுதான்
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Sep 2026 17:16 PM IST

இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இந்த முறை அமலுக்கு வரும் பட்சத்தில் வணிகர்கள், யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பெறும் ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக வணிகர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், ரூ.4,000 கட்டணத்தை யுபிஐ மூலம் ரூ.2,000, ரூ.2,000 என பிரித்து பிரித்து செலுத்தினால் அதற்கு எம்டிஆர் கட்டணம் பொருந்துமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம்

யுபிஐ-ல் ரூ.2,000-க்கு மேலே மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அமலுக்கு வர உள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் இந்த கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. வணிக நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பொதுமக்கள் மீது திணிக்கக்கூடாது என அரசு கூறியிருந்தாலும், மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்கள் திணிக்க முயற்சி செய்யும்.

இதையும் படிங்க : செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?

இந்த நிலையில் தான், ரூ.4,000 கட்டணம் வந்தால் அதனை ரூ.2,000 என பிரித்து பிரித்து யுபிஐ மூலம் செலுத்தினால் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில், இல்லை என்பது தான். உதாரணமாக நீங்கள் ரூ.4,000-க்கு பொருட்களை வாங்கினால் அதனை இரண்டு தனித்தனி பில்களாக பிரித்து ரூ.2,000 என கட்டணம் செலுத்தலாம்.

ரூ.2,000-க்கு குறைவான பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை

எம்டிஆர் கட்டணம் குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.2,000-க்கும் குறைவான யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பரிவர்த்தனை தொகை குறித்த கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதே தவிர, எத்தனை முறை பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!

எனவே இது முற்றிலும் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயானது மட்டுமே ஆகும். நிறுவனங்கள் பில் கட்டணத்தை பிரித்து பிரித்து செலுத்த ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கட்டணம் செலுத்தாமல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Follow Us