AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய நபர்.. இன்று ரூ.9 கோடி வருமானம்!

Karur Man Built 9 Crore Rupees Business | கரூரை சேர்ந்த ஒருவர் பெங்களூரில் ரூ.1 லட்சம் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், வேலையை ராஜினாமா செய்த அவர், சிறிய தொழில் தொடங்கி சுமார் ரூ.9 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

ரூ.1 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய நபர்.. இன்று ரூ.9 கோடி வருமானம்!
பிரதீப் கண்ணன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Sep 2026 19:25 PM IST

செய்யும் வேலை பிடிக்கவில்லை, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், பொருளாதாரம், குடும்ப சூழல் காரணமாக பலரும் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள். காரணம், தங்கள் எடுக்கும் முடிவில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, தோல்வியை தழிவினால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். எனவே தான் பலரும் கைநிறைய சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை இருந்தால் போதும் என நினைத்து அப்படியே இருந்துவிடுகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் கரூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்கி மிளிர்கிறார். அவர் யார், அப்படி என்ன செய்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.1 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய இளைஞர்

தமிழகத்தின் கரூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் கண்ணன். இவர் பெங்களூரில் உள்ள ஆராக்கிள் நிறுவனத்தில் முக்கிய பதவி வகுத்து வந்துள்ளார். அதற்காக மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் தான், 2019 ஆம் ஆண்டு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, அவர் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான கரூருக்கு திரும்பியுள்ளார். வேலையை விட்ட அவர், The Falooda Shop என்ற கடையை தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : Gold : தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டும்.. பிரபல ஆய்வாளர் கிறிஸ் வுட் ஷாக் கணிப்பு!

குல்பி தொழில் தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்த முயற்சி

அவர் ஏற்கனவே பெங்களூரில் குல்பி விற்பனை செய்து வந்துள்ளார். அந்த தொழில் ஆரம்பத்தில் நல்லபடியாக சென்றாலும், பின்னர் அவர் கடையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அவர், எப்படி முறையாக தொழிலை தொடங்க வேண்டும் என திட்டமிட்டு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி, ரூ.6 லட்சம் முதலீட்டில் அவர் ஒரு சிறிய கடையை தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இவர்கள் அக்டோபர் 1 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

நாளடைவில் தொழிலை விரிவுப்படுத்திய அவர், தனது முதல் கிளையை கரூரில் தொடங்கியுள்ளார். பிறகு அவர் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் 18 கிளைகளை திறந்துள்ளார். இன்று சுமார் ரூ.9 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளார்.

Follow Us