AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இவர்கள் அக்டோபர் 1 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

Gas Cylinder Biometric Aadhaar Authentication | கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ளவர்கள் ஆதார் அடிப்படையிலான கேஒய்சி முடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு கேஒய்சி முடிக்கவில்லை என்றால் அக்டோபர் 01, 2026 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இவர்கள் அக்டோபர் 1 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Sep 2026 17:05 PM IST

இந்தியாவில் அரசின் உதவிகள் மற்றும் சேவைகள் உரிய நபருக்கு சென்று சேறும் வகையிலும், தகுதியற்ற பயனர்களுக்கு சென்று சேருவதை தடுக்கவும் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் அனைத்து சேவைகளுக்கும் கேஒய்சி முறையை அறிமுகம் செய்துள்ளது. ரேஷன் கார்டு (Ration Card) முதல் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) வரை என அனைத்திற்கும் இந்த கேஒய்சி (KYC – Know Your Customer) சரிப்பார்ப்பு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், கேஸ் சிலிண்டர் முன்பதிவு தொடர்பான விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் வந்த முக்கிய மாற்றங்கள்

இந்த புதிய விதிகளின் மூலம், எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் யாரெல்லாம்  பயோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் (Biometric Aadhaar Authentication) முறையை செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. ஒருவேளை கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் இதனை செய்யவில்லை என்றால், அக்டோபர் 01, 2026 முதல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தேசிய எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இபிஎஃப் ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு… 7 முக்கிய மாற்றங்கள்

இவர்களுக்கு சிக்கல் இல்லை

ஏற்கனவே சிலிண்டர் இணைப்பில் பயோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் மேற்கொண்ட நபர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது. அவர்கள் வழக்கம் போல கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். பயோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் செய்யாத நபர்களை தான் இந்த கூடுதல் கட்டணம் பாதிக்கும். எனவே, அக்டோபர் 01, 2026-க்குள் இந்த பயோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷனை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க : ரயில்களில் இலவச தண்ணீர் பாட்டில் கிடைக்குமா? உண்மை என்ன?

89.9 சதவீத மக்கள் கேஒய்சி முடித்துவிட்டனர்

செப்டம்பர் 19, 2026 வரையிலான தரவுகளின் படி சுமார் 89.9 சதவீதம் பேர் தங்களது கேஸ் சிலிண்டர் இணைப்புகளுக்கான கேஒய்சியை மேற்கொண்டுள்ளனர். எனவே, மீதமுள்ள நபர்களும் விரைந்து பயோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அரசு இந்த கூடுதல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us