AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இபிஎஃப் ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு… 7 முக்கிய மாற்றங்கள்

New EPF Rules : பணியாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப் திட்டத்துக்கான ஊதிய வரம்பை மத்திய அரசு ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பணியாளர்களுக்கு நடக்கும் 7 முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப் ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு… 7 முக்கிய மாற்றங்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2026 17:36 PM IST

பணியாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப் திட்டத்துக்கான ஊதிய வரம்பை மத்திய அரசு ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இபிஎஃப் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 17, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 51 லட்சம் கூடுதல் ஊழியர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் ஊழியர்களின் மாதாந்திர பிடித்தம், கையில் கிடைக்கும் சம்பளம், ஓய்வுக்கால சேமிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

1. பிஎஃப் வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு

இதுவரை மாத ஊதியம் ரூ.15,000 என்ற உச்சவரம்பை அடிப்படையாகக் கொண்டு கட்டாய பிஎஃப் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விதிகள் நடைமுறையில் இருந்தன. தற்போது இந்த வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் இபிஎஃப் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதன் மூலம் பணியாளர்களுக்கு பிஎஃப் மட்டுமின்றி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பலன்களும் கிடைக்கவுள்ளது.

இதையும் படிக்க : வெறும் ரூ.100-ல் தொடங்கிய தொழில்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்.. சிறு தொழில் மூலம் சாதித்து காட்டிய இளவரசி!

2. பிஎஃப் பிடித்தம்

இபிஎஃப் திட்டத்தின் கீழ் ஒரு பணியாளர் பெறும் சம்பளத்தில் இருந்து 12 சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில், புதிய ரூ.25,000 உச்சவரம்பின் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு பணியாளரின் மாத பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000 ஆக இருக்கலாம். இதற்கு முன்பு ரூ.15,000 உச்சவரம்பின் அடிப்படையில் 12 சதவிகிதம் கணக்கிடப்பட்டபோது, மாத பங்களிப்பு ரூ.1,800 ஆக இருந்தது. இதன் காரணமாக சில பணியாளர்கள் மாதம் ரூ.1200 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.

3. சம்பளம் குறைய வாய்ப்பு

பிஎஃப் திட்டத்துக்கு அதிக தொகை எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், சம்பளத்தில் கையில் கிடைக்கும் தொகை குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, ஒரு பணியாளர் செலுத்தும் பிஎஃப் தொகை ரூ.3,000 ஆக உயர்ந்தால், மாத சம்பளத்தில் ரூ. 12,000 வரை குறைய வாய்ப்பிருக்கிறது.

4. ஓய்வுக்கால சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு

மாதந்தோறும் பிஎஃப் கணக்கில் கூடுதல் தொகை செலுத்தப்படுவதால், நீண்ட காலத்தில் ஊழியரின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு அதிகரிக்கக்கூடும். ஊழியரின் பங்களிப்புடன், விதிகளுக்கு ஏற்ப நாம் பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பும் பிஎஃப் மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு செல்கிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு திட்டத்தின்படி அறிவிக்கப்படும் வட்டி கிடைக்கும். எனவே, பணியாளர்களுக்கு சம்பளம் குறைந்தாலும், ஓய்வுக்காலத்திற்காக சேமிக்கப்படும் தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

5. ஓய்வூதியத்திலும் மாற்றம்

பிஎஃப் திட்டத்தை போல ஓய்வூதியத் திட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படலாம். புதிய ரூ.25,000 சம்பள வரம்பு, பென்சன் திட்டத்திற்கும் பொருந்தும். அதன்படி பென்சன் திட்டத்திற்கான தொகை மாதம் ரூ.1,250-ல் இருந்து சுமார் ரூ.2,083 ஆக உயரக்கூடும். இதனால் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்படும் ஊதிய அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஓய்வூதியத் தொகை ஊழியரின் தகுதியான சேவை காலம் உள்ளிட்ட பல்வேறு பென்சன் திட்ட விதிகளைப் பொறுத்தே அமையும்.

இதையும் படிக்க : வாடிக்கையாளர்கள் மீது மறைமுக MDR கட்டணம்?.. தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு!

6. காப்பீட்டு பலனிலும் மாற்றம்

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் எனப்படும் EDLI மூலம் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டதன் காரணமாக தகுதியுள்ள உறுப்பினர்களுக்கான அதிகபட்ச காப்பீட்டு பலன் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10.5 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இபிஎஃப்ஓ உறுப்பினர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய காப்பீட்டு பலன் அதிகரிக்கும்

7. அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான மாற்றம் இருக்காது

இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும், அனைத்து சம்பளதாரர்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கம் இருக்காது. ஏற்கனவே தங்களுடைய முழு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் பிஎஃப் பங்களிப்பு செய்து வரும் ஊழியர்களுக்கு பெரிய மாற்றம் இருக்காமல் இருக்கலாம். ஆனால் மாத ஊதியம் ரூ.15,000 ஐ விட அதிகம் வாங்குபவர்களுக்கு, புதிய வருமான வரம்பின்படி அவர்களுக்கு இந்த மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

 

 

 

Follow Us