விரைவில் அமலுக்கு வரும் MDR கட்டணம்.. வணிகர்கள் கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன?
Merchant Discount Rate Issue | அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வரும் என என்சிபிஐ கூறியுள்ளது. ஆனால், இந்த கட்டணத்திற்கு வணிகர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, அக்டோபர் 15, 2026 முதல் இந்த கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணம் வணிகர்களை பாதிக்கும் விதமாக உள்ளது. எனவே தான், இந்த கட்டண முறைக்கு வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், எம்டிஆர் கட்டண முறையை திரும்ப பெற வேண்டும் என தேசிய வணிகர்கள் நல வாரியம் (NTWB – National Trader’s Welfare Board) கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில், எம்டிஆர் கட்டணம் வணிகர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எம்டிஆர் கட்டணம் வணிகர்களை எவ்வாறு பாதிக்கும்
பொதுமக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு மிக பரவலாக உள்ளது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, எங்கு எந்த பொருளை வாங்கினாலும் பலரும் யுபிஐ மூலம் தான் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், இந்த எம்டிஆர் கட்டணம் மிகவும் முக்கியத்துவ வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கட்டணம் பொதுமக்களுக்கானது அல்ல, முற்றிலும் வணிக நிறுவனங்களுக்கானது.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?.. இந்த சிம்பிள் ஃபார்முலா போதும்!
அதாவது, ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை பெறும் நிறுவனங்கள், அந்த பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கூறியுள்ளது. அதன்படி பார்த்தால் ஒருவர் ரூ.75,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அதற்கு ரூ.300 கட்டணம் வசூல் செய்யப்படும்.
வணிகர்கள் கடும் எதிர்ப்பு
இந்த கட்டணம் அமலுக்கு வரும் பட்சத்தில் அது வணிகர்களை மிக கடுமையாக பாதிக்கும். எனவே தான் தேசிய வணிகர்கள் நல வாரியத்தில் இருந்து எம்டிஆர் கட்டணத்தை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் இருந்து இந்த கட்டணத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.