AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

OTT, மியூச்சுவல் ஃபண்டுக்கு MDR கட்டணம் பொருந்துமா?.. விதிகள் கூறுவது என்ன?

Is MDR Applicable For OTT and Mutual Fund Payments | யுபிஐ பரிவர்த்தனைக்கு எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓடிடி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுக்கு எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

OTT, மியூச்சுவல் ஃபண்டுக்கு MDR கட்டணம் பொருந்துமா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Sep 2026 13:04 PM IST

இந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பேசுபொருளாக உள்ளதுதான் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம். இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ (UPI – Unified Payment Interface) பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ஓடிடி கட்டணங்கள், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி ஆகியவற்றுக்கும் இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்துமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன?

இந்தியாவில், அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் ரூ.2,000-க்கு மேலான குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றம், தினசரி வாழ்க்கையில் யுபிஐ பயன்படுத்தும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : EPFO ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: 51 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெற வாய்ப்பு

பொதுமக்களுக்கு என்ன சிக்கல்?

இந்த எம்டிஆர் கட்டணம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமோ என்று பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இந்த எம்டிஆர் கட்டணம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. காரணம், இந்த எம்டிஆர் கட்டணம் பொதுமக்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு பொருந்தது. அது வணிக நிறுவனங்களுக்கும், பண பரிவர்த்தனை செய்யும் யுபிஐ அமைப்புகளுக்கும் இடையேயானது.

இதையும் படிங்க : சேமிப்பு Vs கடன்.. திடீர் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஓடிடி, மியூச்சுவல் ஃபண்டுக்கு பொருந்துமா?

தற்போதைய காலட்டத்தில் பலரும் பொழுதுபோக்குக்காக ஓடிடி தளங்களை ரீச்சார்ஜ் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், ரூ.2,000-க்கு மேலான ஓடிடி ரீச்சார்ஜ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கும் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, எந்த வித கட்டணமும் செலுத்தாமல் வழக்கம் போல ஓடிடி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us