UPI-ல் ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் என்ன ஆகும்?.. அரசின் புதிய அறிவிப்பால் குழம்பிய மக்கள்.. முழு விவரம் இதோ!
What MDR Rules Says | மத்திர அரசு எம்டிஆர் கட்டண முறையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.2,000-க்கு குறைவாக யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில், வங்கிகள் கட்டணம் பிடித்தம் செய்யக்கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான், ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் என்ன ஆகும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த புதிய எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) விதிகள் கூறுவது என்ன, ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் என்ன ஆகும்?
மத்திய அரசு விரைவில் எம்டிஆர் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இது யுபிஐ பண பரிவர்த்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. காரணம், தற்போதைய சூழலில் பெட்டி கடைகளில் பொருட்களை வாங்குவது முதல், பெரிய வணிக வளாகங்களில் பொருட்களை வாங்குவது வரை என அனைத்து இடங்களிலும் பலரும் யுபிஐ-ஐ தான் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : இனி EPFO குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!
இந்த நிலையில் தான், யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கட்டணம் அமலுக்கு வரும் பட்சத்தில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.2,000-க்குள் பில் கட்டணம் இருந்தால் அதற்கான எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
யார் யார் கட்டணம் செலுத்த வேண்டும்?
இந்த எம்டிஆர் கட்டணம் பொதுமக்களுக்கானது அல்ல, இது முற்றிலும் வணிக நிறுவனங்களுக்கானது ஆகும். அதுவும் அனைத்து வணிக நிறுவனங்களுக்குமானது அல்லது. இது அதிக அளவில் வருமானம் ஈட்டும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் குறிப்பாக மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : வங்கி Vs ஃபோஸ்ட் ஆபீஸ்.. எதில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்தது.. இப்படி தெரிந்துக்கொள்ளுங்கள்!
0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை இந்த கட்டணம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அரசு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.