AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!

UPI Transactions Fees : இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வரை முற்றிலும் இலவசம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!
யுபிஐ பண பரிவர்த்தனை கட்டண விவரம்.
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Sep 2026 20:33 PM IST

செப்டம்பர் 15, 2026: யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய மாற்றங்களை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவித்துள்ளது. தனிநபர்களுக்கு இடையேயான அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளும் தொடர்ந்து முற்றிலும் இலவசமாக இருக்கும் என்றும், வாடிக்கையாளர்களிடம் எந்தவித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் NPCI தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் சில பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு (P2M) குறைந்த அளவில் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்களின் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் சுமார் 96 சதவீதத்திற்கு இந்த புதிய விதிமுறைகள் பாதிப்பை ஏற்படுத்தாது. சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஒவ்வொரு பள்ளியும் முன்மாதிரிப் பள்ளி.. இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தயாராகும் PM SHRI கல்வி திட்டம்

இலவசமாக தொடரும் சேவைகள்:

  • தனிநபர் ஒருவர் மற்றொரு நபருக்கு அனுப்பும் பணத்திற்கு தொகை வரம்பின்றி எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.
  • ரூ.2,000 வரையிலான அனைத்து வணிகர் பரிவர்த்தனைகளுக்கும் MDR கட்டணம் கிடையாது.
  • QR குறியீடு மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை பணம் பெறும் தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளும் இலவசமாக இருக்கும்.

MDR எப்போது வசூலிக்கப்படும்?

ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் பெரிய P2M பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு MDR அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், வேளாண்மை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 என்ற நிலையான MDR மட்டுமே வசூலிக்கப்படும். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீத MDR, அதிகபட்சமாக ரூ.300 வரை வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க: உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!

வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா?

இல்லை. MDR என்பது வணிகர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான கட்டணமாகும். இதனை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யுபிஐ செயலிகளும் பிளாட்ஃபார்ம் கட்டணம் அல்லது மறைமுகக் கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்கப்படாது. தினசரி பரிவர்த்தனைகளுக்கு மாதாந்திர வரம்பு அல்லது கூடுதல் கட்டணமும் இருக்காது.

மேலும், வணிகர்களிடம் வசூலிக்கப்படும் மொத்த MDR தொகையில் 5 சதவீதத்தைப் பயன்படுத்தி, சிறு வணிகர்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு நிதி உருவாக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் யுபிஐ பயன்பாட்டை விரிவுபடுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2007-ம் ஆண்டின் பணப்பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் கீழ், யுபிஐ வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.

Follow Us