AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேமிப்பு Vs கடன்.. திடீர் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

What To Do For Unexpected Money Need | மனிதர்களுக்கு எப்போதுமே நிதி தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். இந்த நிலையில், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பு அல்லது கடன், இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

சேமிப்பு Vs கடன்.. திடீர் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Sep 2026 18:34 PM IST

மனிதர்களுக்கு எப்போதுமே நிதி தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அவ்வாறு தங்களுக்கு ஏற்படும் திடீர் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் குழப்பமடைவர். இந்த சூழலில் தான் பலரும் தவறான முடிவை எடுப்பர். அதாவது, தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்திவிடுகின்றனர். இந்த நிலையில் தான், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பு பணத்தை செலவு செய்யலாமா அல்லது கடன் பெற்று தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிதி தேவையை பூர்த்தி செய்ய குழப்பமடையும் பொதுமக்கள்

பலரும் தங்களுக்கு திடீர் பொருளாதார தேவை ஏற்படுகிறது என்றால், பர்சனல் லோன் (Personal Loan), கிரெடிட் கார்டு லோன் (Credit Card Loan) ஆகியவற்றை தான் தேர்வு செய்வர். ஏற்கனவே சேமிப்பு அல்லது முதலீடு செய்து வைத்திருக்கும் நபர்கள், தங்களுக்கு பண தேவை ஏற்பட்டால் சேமிப்பை பயன்படுத்துவர்.

இதையும் படிங்க : Silver : மீண்டும் உச்சத்தை தொட தயாராகி வரும் வெள்ளி.. இவர் என்ன சொல்லுறாரு பாருங்க!

சேமிப்பு Vs பெர்சனல் லோன்

எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை சரிசெய்ய சேமிப்பு பணத்தை செலவு செய்வதுதான் மிக சிறந்ததாக இருக்கும். ஆனால், அதற்காக அவசர காலத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடு செய்ய முடியாமல் போகும் நிலையையும் ஏற்படுத்தக்கூடாது. எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும் பணம் இருக்கும் பட்சத்தில், சேமிப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Content Creation மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. ஆன்லைன் மூலம் அசத்தி காட்டியது எப்படி?

ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் லிமிடட் நிறுனரான தாமஸ் ஸ்டீபன் கூறியதாவது, ஒருவர் தனக்கு ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டு கடனை பெறுகின்றனர். அது மிக சுலபமானதாக தோன்றினாலும், அதிக செலவு பிடிக்கும் கடனாக கிரெடிட் கார்டு கடன் உள்ளது. வங்கிகள் பர்சனல் லோனுக்கு 10 முதல் 18 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே கிரெடிட் கார்டு கடனுக்கு 24 சதவீதம் வட்டி வழங்குகிறது.

எனவே உங்களது பொருளாதார சூழல், நிதி சிக்கல்கள், சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us