AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : 2வது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai On September 15, 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது.

Gold Price : 2வது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Sep 2026 10:43 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : சென்னையில் இன்று (செப்டம்பர் 15, 2026) தங்கம் விலை (Gold Price) இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், இன்று இரண்டாவது நாளாக தொடர் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்த நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல், 2026 தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்திக்க தொடங்கியது. பிறகு மீண்டும் உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனையானது. ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. மீண்டும் சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.14,000-க்கு வந்தது. இவ்வாறு தொடர்ந்து மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : வங்கி Vs ஃபோஸ்ட் ஆபீஸ்.. எதில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்தது.. இப்படி தெரிந்துக்கொள்ளுங்கள்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 15, 2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040-க்கும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,316-க்கும், ஒரு கிலோ ரூ.1,22,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தொலைந்த கிரெடி கார்டில் வேறு ஒருவர் செலவு செய்தால், கடனுக்கு யார் பொறுப்பு?

தங்கம் விலை இதுவரை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்துள்ள நிலையில், ஆண்டின் இறுதியில் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us