AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு – திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு

MK Stalin’s Sudden Health Issue : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு – திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2026 10:58 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, செப்டம்பர் 15, 2026 இன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  : திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி

செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 திமுக தொடங்கிய நாள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் விழாவின் போது, திமுக சார்பில் பெரியார் விருது. அண்ணா விருது. கலைஞர் விருது, பாவேந்தர் விருது. பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15, 2026 இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி இந்த 2026 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கும் அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜே.கே.சுபாஷ், கலைஞர் விருது திமுக துணைப் பொதுச்செயலாளர் விருது திருச்சி சிவாவுக்கும், பாரிவேந்தர் விருது மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என.சோமு, பேராசிரியர் விருது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளர் ப.திருமாவலேனுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விநாயகர் சிலை வைப்பதில் தகராறு.. விவசாயி கொடூர கொலை.. ஷாக் சம்பவம்!

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக செப்டம்பர் 15, 2026 இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 15, 2026 இன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us