சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்..
Chennai Traffic: சிங்கப்பெருமாள் கோவிலில் மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல, பொதுமக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் தரப்பிலும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை திரும்பும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
செப்டம்பர் 14, 2026: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முடித்துவிட்டு சென்னைக்கு ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வருவதன் காரணமாக, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஊருக்கு படையெடுத்த மக்கள்:
வார இறுதி நாட்கள் மற்றும் பிள்ளையார் சதுர்த்தி என சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த சூழலில், பண்டிகை முடிந்த நிலையில் அனைவரும் மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.
இன்று பிற்பகலில் இருந்தே தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறு.. டாஸ்மாக் கடை வாசலில் இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்..
சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்:
நாளை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் செயல்படும் என்பதன் காரணமாக அனைவரும் ஊர் திரும்புகின்றனர். இந்த சூழலில், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை திரும்பும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேலும் படிக்க: மின்சார துறையில் வரும் முக்கிய மாற்றம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..
சென்னை திரும்பும் மக்கள் அவதி:
சிங்கப்பெருமாள் கோவிலில் மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல, பொதுமக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் தரப்பிலும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கம் போலக் கிளாம்பாக்கத்திலிருந்து 47 வழித்தடங்களில் இயக்கப்படும் 508 மாநகரப் பேருந்துகளுடன் (MTC) கூட்ட நெரிசலைக் சமாளிக்கச் செப்டம்பர் 14 மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் 50 கூடுதல் பேருந்துகள் மூலம் 400 நடைகளும் (Trips), செப்டம்பர் 15 அதிகாலை முதல் கூடுதலாக 150 சிறப்பு நடைகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு மட்டும் பயணிகளை ஏற்றி வரச் சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் பாரிமுனை போன்ற முக்கிய இடங்களுக்கு விரைவாகச் செல்ல ஏதுவாக இந்த உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.