Viral Video : சாலையோர உணவு கலாச்சாரத்தை தலைகீழாக மாற்றிய அதிகாரி.. குவியும் பாராட்டு!
Mumbai Street Food Culture Changed | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மும்பையில் சாலையோர உணவு கலாச்சாரம் மிகவும் சுகாதாரமான முறையில் மாறியுள்ளது தொடர்பாக இன்ஃப்ளூயன்சர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில், மனிதர்கள் செய்யும் சில தவறான மற்றும் அஜாக்கிரதையான செயல்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகும். குறிப்பாக, அசுத்தமாக, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஆனால், மும்பையில் உள்ள சாலையோர உணவகங்களில் மிகவும் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான முறையில் உணவு பொருட்கள் சமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிகவும் சுகாதாரமான முறையில் நடத்தப்படும் மும்பை சாலையோர கடைகள்
மும்பை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர், அங்குள்ள சாலையோர கடைகள் எவ்வாறு சுகாதாரமான முறையில் உணவு விற்பனை செய்கின்றன என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சாலையோர கடைகள் என்றாலே நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை மடித்து கொடுப்பது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அதிக நிறங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட சிக்கல் இருந்து வந்த நிலையில், அவற்றை மும்பைக்கு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி துகாராம் முண்டே மாற்றியமைத்துள்ளார்.




இதையும் படிங்க : Viral Video : குட்டி நாயை தாக்காமல் விட்ட சிறுத்தை.. அந்த மனசு தான் கடவுள்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சாலையோர உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவது தொடர்பாக காட்சிகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், மும்பைக்கு புதியதாக வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வருவதற்கு முன்னதாக சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகவும், தற்போது மிகவும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : இடுப்பளவு வெள்ள நீரில் திருமணம் செய்த ஜோடி.. பிலிப்பைன்ஸில் சுவாரஸ்ய சம்பவம்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த உணவுத்துறை அதிகாரியை பாராட்டு பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.