AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : நடைபாதையில் வந்த இருசக்கர வாகனங்கள்.. 3 பெண்கள் செய்த மாஸ் செயல்.. வைரல் வீடியோ!

Women Block Sidewalk Bikers | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நடைபாதையில் வந்த இருசக்கர வாகனங்களுக்கு மூன்று பெண்கள் வழி விடாமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : நடைபாதையில் வந்த இருசக்கர வாகனங்கள்.. 3 பெண்கள் செய்த மாஸ் செயல்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Nov 2026 22:20 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் விமர்சனங்களை பெறும் நிலையில், சில வீடியோக்கள் பாராட்டுக்களை பெறும். அந்த வகையில், நடைப்பாதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நபர்களுக்கு மூன்று பெண்கள் பாதையை மறித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடைபாதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்கள்

இந்திய சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு சில விதிகள் உள்ளன. அந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம், சிறை வரை தண்டனை வழங்கப்படும். அத்தகைய விதிகளில் ஒன்றுதான் நடைபாதையில் வாகனங்கள் செல்லக்கூடாது என்பது. அதனையும் மீறி ஏராளமானவர்கள், போக்குவரத்து நெரிசலின்போது நடைபாதையில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு, நடைபாதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றவர்களுக்கு பெண்கள் செய்த செயல் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஸ்டைலான பையன்.. வைரல் சிறுவனின் கல்விச்செலவை ஏற்ற ஷோரூம் ஓனர்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் சில பெண்கள் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சிலர் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வழி விடும்படி கூறுகின்றனர். ஆனால், அந்த பெண்களோ எதை குறித்தும் கவலைக்கொள்ளாமல்  அந்த பாதையில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : இருசக்கர வாகன ஹெட்மெட்டுக்கு ஏர் பேக் ஆ?.. இணையத்தை ஆச்சர்யப்படுத்திய வீடியோ!

வைரல் வீடியோவுக்கு பொதுமக்கள் பாராட்டு

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், வாகனத்தில் சென்ற நபர்களை தவறு செய்ய விடாமல் தைரியமாக எதிர்த்து நின்னதாக அந்த பெண்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us