AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : India Vs China ரயில்கள்.. ஒப்பிட்டு வீடியோ பதிவிட்ட இளைஞர்.. பேசுபொருளான வீடியோ!

India vs China Train Video Sparks Debate | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் ரயில்களின் தரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Viral Video : India Vs China ரயில்கள்.. ஒப்பிட்டு வீடியோ பதிவிட்ட இளைஞர்.. பேசுபொருளான வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Nov 2026 14:10 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தான், சீனா (China) மற்றும் இந்தியாவில் (India) ரயில்கள் எப்படி உள்ளன என்பதை ஒப்பிட்டு பார்த்து இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா Vs சீனா ரயிலள் : இளைஞர் வெளியிட்ட வீடியோ

இந்தியர்கள் பலரும் இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ ஆசைப்படுகின்றனர். சிலரோ கல்வி, மற்றும் வேலை ஆகியவற்றுக்காக தற்காலிகமாக வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு, வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் நபர்கள் அங்குள்ள நிலையையும், இந்தியாவில் உள்ள நிலையையும் ஒப்பிட்டு வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறும். அத்தகைய வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சூட்கேசுக்குள் நெளிந்த 2 விஷப்பாம்புகள்.. விமான நிலையத்தில் பரபர சம்பவம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

ரயில்களில் தரத்தை குறித்து பதிவிட்ட நபர்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த இளைஞர் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் ரயில்களின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். முதலில் அவர் இந்திய ரயிலின் காட்சிகளை பதிவிட்டுள்ளார். அதில் இருக்கும் இந்திய ரயில் மிகவும் அசுத்தமாக உள்ளது. கழிவறைகள், இருக்கைகள் என அனைத்து பகுதியும் அசுத்தமாக உள்ளது. இதுவே சீனா ரயில் மிகவும் சுத்தமாக உள்ளது. அதில் அவர், இந்திய ரயில்களில் கழிவறைகளில் ஆட்கள் இருக்கின்றனரா, இல்லையா என்பதை நீங்கள் தான் பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், சீனாவில் ரயில்களில் அப்படி இருக்காது. கழிவறையில் ஆட்கள் இருந்தால் அங்கு விலக்கு எரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : காட்டில் இருந்த அதிசயம்.. டைனோசர் காலத்து காளான்.. விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ

இவ்வாறு 59 விநாடிகள் அடங்கிய வீடியோ காட்சியை அவர் பதிவிட்டுள்ள நிலையில், அது இணையத்தில் வைரலாகி மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us