Viral Video : அலுவலகத்தில் இருந்து கிரிக்கெட் பார்த்த இரண்டு ஊழியர்கள்.. கேமராவில் சிக்கியதும் செய்த செயல்!
Employees Caught on Camera Watching Cricket Match | நியூசிலாந்தில் அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் இருவர், ஜன்னல் வழியாக அருகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அவர்களை கேமரா போகஸ் செய்ததும் அவர்கள் செய்த செயல் தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் வித்தியாசமான் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அலுவலகத்தில் இருந்து ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்கள், கேமராவில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
அலுவலகத்தில் இருந்து கிரிக்கெட் பார்த்த இரண்டு ஊழியர்கள்
ஆண்களுக்கு கிரிக்கெட் மீது தனி ஆர்வம் இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு ஆண்களுக்கும் கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக உள்ளது. அந்த வகையில் தான், அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டு இருந்த ஊழியர்கள் இருவர், வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : மீண்டும் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை.. இணையத்தை கண் கலங்க வைத்த வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Caught red-handed 😭😭
#SAvAUS https://t.co/7nc8z4ZH4S
— FanCode (@FanCode) October 27, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கிரிக்கெட் மைதானத்தின் அருகில் உள்ள அலுவலகத்தின் கண்ணாடி வழியாக இரண்டு ஊழியர்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது கிரெக்கெட் போட்டியை வீடியோ பதிவு செய்துக்கொண்டு இருந்த கேமரா, அந்த ஊழியர்களை போகஸ் செய்த நிலையில், அதுவரை கிரெக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள், திடீரென வேலை செய்வதை போல நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார் பரிசு! மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வீடியோ
அக்டோபர் 27, 2026 அன்று நியூசிலாந்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அலுவலகத்தில் வேலை செய்யாமல், அருகில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துக்கொண்டு இருந்த ஊழியர்கள், கேமரா தங்களின் பக்கம் திரும்பியதும், மிகவும் தீவிரமாக வேலை செய்வதை போல பாவனை செய்கின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அந்த சம்பவத்துடன் தங்களை தொடர்ப்புபடுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.