AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : பிறந்த பச்சிளம் குழந்தை செய்த ஆச்சர்ய செயல்.. இணையத்தை வியக்க வைத்த வீடியோ!

Newborn Goes Viral with Unbelievable Post-Birth Pose | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிறந்த குழந்தை செயல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : பிறந்த பச்சிளம் குழந்தை செய்த ஆச்சர்ய செயல்.. இணையத்தை வியக்க வைத்த வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Oct 2026 20:31 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில ஆச்சர்யமான மற்றும் அசாத்தியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்கள் படம் பிடிக்கப்படவில்லை என்றால், உண்மை என யாரும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். அந்த வகையில், பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையின் ஆச்சர்யமூட்டும் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆச்சர்யமூட்டும் பச்சிளம் குழந்தையின் செயல்

தற்போதைய சூழலில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளதன் காரணமாக தங்களை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களை அவர்கள் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் மிகவும் வேகமாக வைரலாகிவிடும். அந்த வகையில் தான், பிறகு ஒருசில நிமிடங்களே ஆன குழந்தையின் ஆச்சர்யமூட்டும் செயல்கள் தொடர்பான வீடியோ இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : மரணம் குறித்து பிரசங்கித்த சில நிமிடங்களில் உயிரிழந்த பாதிரியார்! தலையில் விழுந்த பிரம்மாண்ட சிலுவை

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பிறந்து ஒருசில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை மருத்துவர் பரிசோதனை செய்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு, இயல்பு தானே என உங்களுக்கு தோன்றலாம்.

இதையும் படிங்க : Viral : பீகார் இளைஞருக்காக கடல் கடந்து வந்த ரஷ்ய பெண்.. இணையத்தில் வைரலாகும் அழகிய காதல் கதையின் வீடியோ!

அந்த குழந்தை ஒரு பச்சிளம் குழந்தையை போல் இல்லாமல், தலையின் பின்பக்கம் கைகளை கட்டிக்கொண்டு, கால் மீது கால் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தான் அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us