முதுகில் குழந்தையுடன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Ladakh Woman Works at Petrol Pump with Baby | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் முதுகில் தனது கைக்குழந்தையை சுமந்துக்கொண்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், லடாக்கில் பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை முதுகில் சுமந்தபடி பெட்ரோல் பங்கில் பணி செய்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுகில் குழந்தையுடன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்வது போதுமானதாக இல்லை. கணவன், மனைவி என இருவருமே சேர்ந்து உழைத்தால் மட்டும்தான் அவர்களால் தங்களது குடும்பத்தை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நடத்த முடியும். இந்த நிலையில், லடாக்கில் குடும்ப வறுமை காரணமாக பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை முதுகில் சுமந்துக்கொண்டு வேலை செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.




இதையும் படிங்க : Viral Video : சாலையோர உணவகத்தில் நடந்த கலவரம்.. இரண்டு குழுக்கள் இடையே பயங்கர மோதல்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை ஒரு துணியை கொண்டு முதுகில் கட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் அவ்வாறு தனது குழந்தையை முதுகில் சுமந்துக்கொண்டே பெட்ரோல் போடும் வேலைகளை செய்கிறார். அந்த பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் போடச் சென்ற நபர் ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : AI கேமராவின் சொதப்பல்.. கிடாரால் வந்த ரூ.500 அபராதம்.. ட்ராபிக் சிக்னல் குழப்பம்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.