Viral Video : 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Old Friends Return To School After 50 Years | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உலகிற்கு மிக எளிதாக தெரியவரும். அதாவது, ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இத்தகைய சுவாரஸ்யமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்தவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்
ஒவ்வொவருவரின் வாழ்விலும் அவர்களது பள்ளி பருவம் மிகவும் மறக்க முடியாததாக இருக்கும். எந்த வித கவலைகளும் இல்லாமல், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களால் பள்ளி பருவம் நிறைந்திருக்கும். இவ்வாறு மகிழ்ச்சியான பள்ளி பருவத்தை பல வருடங்கள் கழித்து மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். அந்த வகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்தவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சாலையோர உணவு கலாச்சாரத்தை தலைகீழாக மாற்றிய அதிகாரி.. குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிலர் பள்ளி குழந்தைகளை போல ஆடை அணிந்துக்கொண்டு பள்ளிக்குள் ஓடுகின்றனர். பிறகு பள்ளிக்குள் செல்லும் அவர்கள், அங்கு அவர்கள் படிக்கும்போது எப்படி விளையாடினார்களோ அதேபோல விளையாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி ஒட்டி ரூ.27,000 விற்பனையாகும் தங்க மோதகம்.. இணையத்தில் வைரல்
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பிள்ளை பருவம் எப்போதுமே சிறப்பானது, அவர்கள் அதனை மீண்டும் வாழ்ந்ததை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.