AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : ஒரு கடைசி முத்தம்.. பணி ஓய்வின் போது பேருந்து ஓட்டுநர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Driver's Last Kiss To The Bus | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது பணி ஓய்வின் போது தான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டிய பேருந்துக்கு முத்தம் கொடுத்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ஒரு கடைசி முத்தம்.. பணி ஓய்வின் போது பேருந்து ஓட்டுநர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Sep 2026 17:51 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இவ்வாறு பல வகைகளில் வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான், பணி ஓய்வு பெறும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தான் இத்தனை ஆண்டுகளாக இயக்கிய பேருந்துக்கு கடைசியாக ஒருமுறை முத்தமிடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடைசி முத்தம் – ஓய்வு பெறும் ஓட்டுநர் செய்த செயல்

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் 60 வயதை அடையும் நபர்களுக்கு பணி ஓய்வு வழங்கப்படுகிறது. பணி ஓய்வுக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை இருந்தாலும், தான் இத்தனை ஆண்டுகளாக செய்த பணியை இனி செய்ய முடியாது என்ற கவலை பலருக்கும் இருக்கும். அந்த வகையில் தான் இத்தனை ஆண்டுகள் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் ஒருவர், தனது பணி ஓய்வின் போது பேருந்துக்கு முத்தம் கொடுத்தது சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சாட்ஜிபிடியை உண்மையான பெண் என நினைத்து பேசிய மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், அரசு பேருந்தின் முன்பு ஓட்டுநர் ஒருவர் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர், அந்த பேருந்தை தொட்டு பார்த்து கண்ணீர் சிந்துகிறார். பிறகு அந்த பேருந்துக்கு முத்தம் கொடுக்கிறார். 18 ஆண்டுகளாக தான் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், பணி ஓய்வின் போது அவர் செய்த இந்த செயல் இணையத்தை கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us