AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : குழந்தைக்காக கேப் ஓட்டும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Woman Works As A Cab Driver For her Child | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், பெண் ஒருவர் தனது குழந்தைக்காக கேப் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : குழந்தைக்காக கேப் ஓட்டும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Aug 2026 18:46 PM IST

உலகில் நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், தனது குழந்தைக்காக கேப் ஓட்டும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தைக்காக கேப் ஓட்டு பெண்

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பணிகளிலும் பெண்கள் கால் பதித்துவிட்டாலும், பல துறைகளில் மிக குறைவான அளவே பெண்கள் உள்ளனர். அத்தகைய பணிகளில் ஒன்றுதான் ஓட்டுநர் பணி. நாம் தினசரி பயணம் செய்யும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவற்றில் மிக குறைந்த அளவிலான பெண் ஓட்டுநர்களை மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில் பெண் ஓட்டுநர் ஒருவரின் கேபில் பயணம் செய்த பயணி ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆபத்தை உணராத மக்கள்.. புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்த வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Aayushi Lahiri (@aayushmatibhava)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண்  ஒருவர் கேபில் பயணம் செய்கிறார். அந்த கேபை பெண் ஒருவர் ஓட்டுகிறார். அவரிடம் அந்த பெண் பேச்சுக்கொடுக்கிறார். அப்போதுதான் அவர் ஒரு குழந்தைக்கு தாய் என்பதும், கணவரின் துணை இல்லாமல் தனது குழந்தையை வளர்த்து வருவதும் தெரிய வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆபத்தை உணராத மக்கள்.. புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்த வீடியோ வைரல்!

தான் 10 வயதில் இருந்து வாகனம் ஓட்டுவதாகவும், திருமணங்கள் எப்போதாவது தான் நடைபெறுவதால் மேக் தொழில் சிறப்பாக இல்லை என்பதால் ஓட்டுநராக ஜூன் மாதம் முதல் பணி செய்து வருவதாக அந்த பெண் கூறியுள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us