Viral Video : வானில் பாராகிளைடிங் செய்துக்கொண்டே பிறந்த நாள் கொண்டாடிய பெண்.. வைரலாகும் வீடியோ!
Mid Air Birthday Bash | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வானில் பாராகிளைடிங் செய்துக்கொண்டே பெண் ஒருவர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமான சம்பவங்கள், உண்மை சம்பவங்கள், சிசிடிவி காட்சிகள் ஆகியவை. இவ்வாறு பல விதமான வீடியோக்கள் வெளியாகி, வெவ்வேறு வகையான விமர்சனங்களை பெறும். அந்த வகையில் தான், வானில் பாராகிளைடிங் (Paragliding) செய்துக்கொண்டே பெண் ஒருவர் கேட் வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வானில் பறந்துக்கொண்டு கேக் வெட்டிய பெண்
சில மனிதர்களுக்கு சாகசம் செய்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதன் காரணமாக அவர்கள் சாகச விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்பர். இவ்வாறு சாகசங்களை விரும்பும் நபர்களுக்காகவே ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், பாராகிளைடிங் ஆகிய விளையாட்டுகள் உள்ளன. பலரும் இந்த சாகசங்களை மிகவும் ஆர்வத்துடன் செய்கின்றனர். அந்த வகையில், பாராகிளைடிங் செய்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : திருமண வரவேற்பு.. வித்தியாசமாக என்ட்ரி கொடுத்த ஜோடி!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாராகிளைடிங் செய்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் தான் மடி மீது வைத்திருந்த கேக்கை எடுத்து வெட்டுகிறார். தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவர் அந்த கேக்கை வெட்டுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென சிவப்பாக மாறிய ஓடை.. துருக்கியில் நடந்த சம்பவம்!
பல விதமான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுமக்கள்
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, பாராகிளைடிங் தொடர்பான பல்வேறு விபத்து சம்பவங்கள் உள்ள நிலையில், இத்தகைய செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். சிலரோ அவருக்கு பிடித்ததை அவர் செய்கிறார் என அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.