பிக்பாஸில் டிக்கெட் டூ ஃபினாலே யாருக்கு கிடைக்கவே கூடாது… போட்டியாளர்கள் ஓபன் டாக் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி தற்போது 12-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 8-வது சீசனில் இருந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்காக தனது கால்ஷீட்டை ஒதுக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 12-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது இந்த 12-வது வாரத்தில் 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இன்று எந்தப் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்பது குறித்தும் இன்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.




பிக்பாஸில் டிக்கெட் டூ ஃபினாலே யாருக்கு கிடைக்கவே கூடாது:
இந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களிடையே ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அதில் இந்த வீட்டில் எந்த போட்டியாளருக்கு இந்த டிக்கெட் டு ஃபினாலே கிடைக்க கூடாது என்று நினைக்கிறீங்க என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த போட்டியாளர்களில் அதிகப்படியானோர் லக்ஷ்மி பிரியவிறுகும், பிரித்வி மற்றும் முனியம்மாவிற்கும் இந்த டிக்கெட் டூ ஃபினாலே கிடைக்க கூடாது என்று தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் வெந்தது எது? வேகாதது எது? வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day84 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/ZDE3nn69lf
— Vijay Television (@vijaytelevision) November 29, 2026
Also Read… Rishikanth: ரஜினி சாரை கடவுளைப் போல மதிக்கிறேன்.. ஆனால் – ரிஷிகாந்த் பேச்சு!