AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் இவருக்கு பதில் இவர் இருந்தா நல்லா இருக்கும்… போட்டியாளர்கள் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 12 வாரங்கள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு டாஸ்கை போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கிறார் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் இவருக்கு பதில் இவர் இருந்தா நல்லா இருக்கும்… போட்டியாளர்கள் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 10:34 AM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் முதலில் அனுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வைல்கார்ட் போட்டியாளர்களாக 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் நடைப்பெற்ற எவிக்‌ஷன் மற்றும் கடந்த 3 வாரங்களாக நடைப்பெற்ற டபுள் எவிக்‌ஷனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தில் இந்த வாரம் முழுவதும் வீட்டிற்குள் வந்த நிலையில் தற்போது வார இறுதியை எட்டியுள்ளது. தற்போது 12-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். தற்போது உள்ள 8 போட்டியாளர்களில் எந்த நபருக்கு பதில் எந்த நபர் இந்த போட்டியில் இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என ஒருவர் ஒருவராக வந்து கூற சொல்கிறார்.

பிக்பாஸில் இவருக்கு பதில் இவர் இருந்தா நல்லா இருக்கும்:

அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு யார் தோன்றுகிறதோ அதனைக் கூறுகிறார்கள். அதன்படி முதலாவதாக வந்த முனியம்மாள் டிடிஎஃப் வாசனுக்கு பதில் ஷமா இருந்து இருக்கலாம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து வந்த ஜேசன் முனியம்மாவிற்கு பதில் ஷமா இருந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். பிறகு வந்த டிடிஎஃப் வாசன் முனியம்மாவிற்கு பதில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியில் ராகவ் இருந்து இருக்கலாம் என்று பதிலளிக்கிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அந்த படத்திற்கு ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் ரூ 2000 தான்.. ஆனால் படத்தின் வசூல் ரூ 3 கோடி.. அட இந்த படம்தான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் கவனம் ஈர்க்கும் மூன்வால்க் படத்தின் ட்ரெய்லர்!

Follow Us