AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்திலிருந்து வெளியானது கொம்பேந்தி வீடியோ பாடல்!

Kombendhi Video Song Out Now | நடிகர் சூர்யவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் சீன். இந்தப் படம் 4 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் படத்தில் இருந்து வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

சீன் படத்திலிருந்து வெளியானது கொம்பேந்தி வீடியோ பாடல்!
சீன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 11:55 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் 47-வது படமாக தமிழ் சினிமாவில் வெளியானது சீன். இந்தப் படம் கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் இந்த சீன் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் நடிகர் நஸ்லேன் இந்த சீன் படத்தில் வில்லனாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன், சுரேஷ் மதியழகன், அனுராதா ஸ்ரீதர், கஜராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இவர்கள் மட்டும் இன்றி நடிகர்கள் டொவினோ தாமஸ் மற்றும் ஜோதிகா இருவரும் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீன் படத்திலிருந்து வெளியானது கொம்பேந்தி வீடியோ பாடல்:

ஆக்‌ஷன் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மேலும் படத்தைப் போல பாடல்களும் இந்தப் படத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து தற்போது கொம்பேந்தி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தபோதும் நான் நல்ல துணை கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தேன் – நடிகர் ரிஷிகாந்த்!

சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தப் படம் எதன் அடிப்படையில் இருக்கும்? வைரலாகு தகவல்

Follow Us