AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்த சூர்யாவின் சீன் படம் – படக்குழு வெளியிட்டுள்ள பதிவு!

Scene Movie Successfully enters 4th week | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் சீன். இந்தப் படம் தற்போது 4-வது வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்த சூர்யாவின் சீன் படம் – படக்குழு வெளியிட்டுள்ள பதிவு!
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 15:12 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் வெளியான படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டிற்கான பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூர்யவின் சினிமா கெரியரில் இந்த 2026-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி முதலாவதாக கருப்பு, இரண்டாவதாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் மூன்றாவதாக சீன் என தொடர்ந்து படங்கள் வெளியானது.

அதன்படி இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான சீன் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் தான் ஜித்து மாதவன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்துள்ள நிலையில் வில்லனாக நடிகர் நஸ்லேன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்த சூர்யாவின் சீன் படம்:

மேலும் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்துள்ளது. இது தொடர்பாக சீன் படக்குழு தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Hello Kadhal: ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்திலிருந்து வெளியான மஜா மஜா வீடியோ பாடல்!

Follow Us