AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Dhanush 56 Movie Shooting Update | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கொடுத்த அப்டேட் வைரலாகி வருகின்றது.

தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தனுஷ் 56 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Nov 2026 17:26 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக மட்டும் இன்றி சினிமா துறையில் பன்முதக் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக ஓ.எம் படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். மேலும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்:

தொடர்ந்து விறுவிறுபபாக இந்தப் படத்தின் பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் கேட்க அதற்கு இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பதிலளித்துள்ளார். அதன்படி இந்த தனுஷ் 56 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜயகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூர்யா-அருண் மாதேஸ்வரன் கூட்டணி படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Inji Vellam: ஆச்சி ஆச்சி காமாட்சி.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Follow Us