பீரியாட்டிக் கதையில்… மீண்டும் இணைகிறதா தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி?
Dhanush And Anand L Rai Collaboration: பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆனந்த் எல் ராய். இவரின் இயக்கத்திலும், தனுஷின் நடிப்பிலும் இதுவரை மொத்தமாக 3 படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் 4வது முறையாக இந்த கூட்டணி இணைவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகராக மக்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் சினிமாவில் வெறும் திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்த வரிசையில் இறுதியாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஓ.எம் (O.M Movie). இந்த படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியான நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், டி56 (D56 Movie) என்ற திரைப்படத்தில் தனுஷ் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இவர், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Director Anand L Rai) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இவர்களின் கூட்டணியில் ராஞ்சனா, கலாட்டா கல்யாணம் மற்றும் தேரே இஷ்க் மே போன்ற படங்கள் வெளியான நிலையில், 4வது முறையாக இந்த கூட்டணி இணைகிறதாம்.




இதையும் படிங்க: அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!
நான்காவது முறையாக இணையும் தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி:
இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றபடம் தேரே இஷ்க் மே. இதில் தனுஷ் மற்றும் இந்தி நடிகை கிருதி சனோன் என இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது 4வது முறையாக மீண்டும் இணைகிறதாம்.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
இந்த கூட்டணியானது பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக அமையும் என உறுதியளிக்கும் ஒரு காதல் கலந்த காலகட்ட அதிரடித் படத்தில் இணைகிறதாம். இப்படம் 2027ம் ஆண்டின் இடைப்பட்ட மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
– After Raanjhanaa, AtrangiRe, and #TereIshkMein, #AanandLRai and #Dhanush are reuniting for their fourth film, a romantic period action drama that promises to be an ambitious cinematic spectacle. The film is expected to go on floors in mid 2027.
– Currently in pre production, the team is working on creating an elaborate period world for the story.
#OM— Movie Tamil (@_MovieTamil) November 26, 2026
இந்த கூட்டணி 4வது முறையாக மீண்டும் இணைவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. ஆனால தனுஷ் 56வது படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்து பேக் டூ பேக் இயக்குநர்களுடன் படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.