AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Indian Womens Hockey: FIH உலக தரவரிசையில் 4வது இடம்.. இந்திய மகளிர் ஹாக்கி அணி புதிய மைல்கல்!

FIH World Number 4 Ranking: இந்திய மகளிர் ஹாக்கி அணி FIH உலகத் தரவரிசையில் 4வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஜப்பானை 4-0, சீனாவை 6-2 என வீழ்த்தியதன் மூலம் இந்த முன்னேற்றம் சாத்தியமானது. சலீமா டெட்டே தலைமையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வியின்றி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.

Indian Womens Hockey: FIH உலக தரவரிசையில் 4வது இடம்.. இந்திய மகளிர் ஹாக்கி அணி புதிய மைல்கல்!
இந்திய மகளிர் ஹாக்கி அணிImage Source: Hockey India/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Nov 2026 17:45 PM IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி (Indian Womens Hockey) உலகத் தரவரிசையில் (FIH Ranking) 4வது இடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது. வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் 4வது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். நேற்று அதாவது 2026 நவம்பர் 25ம் தேதி ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி இந்த இடத்தைப் பிடித்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியா முதல் முறையாக 5வது இடத்தைப் பிடித்திருந்தது.

முன்னதாக, கடந்த 2026 நவம்பர் 24ம் தேதி இந்தியா சீனாவை 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த வெற்றிக்கு பிறகு இந்திய ஹாக்கி மகளிர் அணி முதல் முறையாக FIH உலகத் தரவரிசையில் 5வது இடத்திற்கு உயர்ந்தது. நேற்று அதாவது 2026 நவம்பர் 25ம் தேதி ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து நான்காவது இடத்தைப் பிடித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்குள், இந்திய ஹாக்கி மகளிர் அணி தரவரிசையில் ஸ்பெயின் (5) மற்றும் ஜெர்மனியை (6) முந்தியுள்ளது.

ALSO READ: ராணாவுக்கு எதிராக புகார்.. பாகிஸ்தான் ஏ வீரர்கள் எடுத்த முக்கிய முடிவு!

4வது இடத்தில் இந்திய ஹாக்கி மகளிர் அணி:

சலீமா டெட்டே தலைமையில் இந்திய அணி மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி வருகிறது. இத்தொடர் முழுவதும் இதுவரை தோல்வியடையாமல், தனது 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தியாவின் அரையிறுதிப் போட்டி நாளை அதாவது 2026 நவம்பர் 27ம் தேதி மலேசியாவுக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்த 2026ம் ஆண்டு, இந்தியா மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை ஹாட்ரிக் முறையில் வெல்லும். இத்தொடரின் வரலாற்றில் ஒரு அணி தொடர்ச்சியாக 3 முறை கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

மகளிர் ஹாக்கி உலகத் தரவரிசை

மகளிர் ஹாக்கியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா இரண்டாம் இடத்தில் உள்ளது. பெல்ஜியம் தற்போது மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவை விட, இந்த 3 அணிகளும் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளன. முதல் 3 இடங்களுக்குள் வர வேண்டுமென்றால், இந்திய அணி இன்னும் பல வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும்.

ALSO READ: ஐபிஎல் 2027 ஏலத்தில் இதுவரை 1220 வீரர்கள் பதிவு.. விரிவான பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!

இந்திய மகளிர் அணிக்கு அற்புதமான ஆண்டு:

2026 ஆம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில்தான் இந்திய அணி FIH நேஷன்ஸ் கோப்பையை வென்றதுடன், உலகக் கோப்பையில் 5வது இடத்தைப் பிடித்தது. இது 1974 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பையில் அவர்களின் மிகச் சிறந்த செயல்திறனாகும். மேலும், 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி வரலாறு படைத்த ஆண்டும் இதுவே ஆகும்.

Follow Us