AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Hello Kadhal: ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்திலிருந்து வெளியான மஜா மஜா வீடியோ பாடல்!

Maja Maja Song: நடிகராக தமிழ் மக்களிடையே பிரபலமானவராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள 40வது திரைப்படம்தான் ஹலோ காதல். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், மஜா மஜா என்ற 3வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Hello Kadhal: ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்திலிருந்து வெளியான மஜா மஜா வீடியோ பாடல்!
மஜா மஜா வீடியோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2026 17:30 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் நடிகராகவும், ஒரு சைக்கிளாராகவும் பேமசானவராக இருந்துவருபவர் ஆர்யா (Arya). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை திரைப்படங்களில் நடிகராக படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் அனந்தன் காடு (Anandhan Kaadu). மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் உருவான இப்படம், 2026 ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்த படமானது எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பின், ஆர்யாவின் நடிப்பில் 40வது படமாக உருவாகிவந்ததுதான் ஹலோ காதல் (Hello Kadhal Movie). இதை இயக்குநர் நிகில் முரளி (Director Nikhil Muraly) இயக்கியுள்ள அந்நிலையில், ஆர்யா தனது சொந்த தயாரிப்பின் கீழ் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடலான “மஜா மஜா” (Maja Maja Song) பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

ஆர்யாவின் ஹலோ காதல் படக்குழு வெளியிட்ட மஜா மஜா பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

ஆர்யாவின் ஹலோ காதல் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஹலோ காதல் படத்தை இயக்குநர் நிகில் முரளி இயக்க, ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா என இரு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த படமானது அதிரடியான மற்றும் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இயக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: பீரியாட்டிக் கதையில்… மீண்டும் இணைகிறதா தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி?

இந்த படத்தில் ஆர்யாவுடன், காளி வெங்கட், கருணாகரன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாவற்றையும் நிறைவு செய்த நிலையில், 2026 டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில் இதன் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us