AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலா ரூ.1 லட்சம் வரை மானியம்… பால் பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கும் தமிழக அரசு – யாருக்கு கிடைக்கும்?

Dairy Farm Subsidy Scheme : தமிழகத்தில் சிறு, குறு பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 500 நடுத்தர அளவிலான பால் பண்ணைகள் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அரசு 25 சதவிகிதமான ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கும்.

தலா ரூ.1 லட்சம் வரை மானியம்…  பால் பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கும் தமிழக அரசு  – யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2026 17:15 PM IST

சென்னை, நவம்பர் 26 : தமிழகத்தில் சிறு, குறு பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 500 நடுத்தர அளவிலான பால் பண்ணைகள் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு (TN Government) அரசாணை வெளியிட்டுள்ளது. பண்ணை அமைப்பவர்களுக்கு, மொத்த முதலீட்டில் 25 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க ரூ.5 கோடி

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் 5 கறவை மாடுகள் அல்லது எருமைகளை வாங்கி, நடுத்தர அளவிலான பால் பண்ணையை அமைக்கலாம். ஒரு பண்ணை அமைப்பதற்கான மொத்த முதலீடு ரூ.4 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 5 கால்நடைகள் வாங்க ரூ.3,00,000 தொகையும், பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இதில் அரசு 25 சதவிகிதமான ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கும். மீதமுள்ள ரூ.3 லட்சம் வங்கிக் கடன் ஏற்பாடு செய்யப்படும். அதாவது ஒரு கால்நடைக்கு அதிகபட்சம் ரூ.60,000 வரை செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3 லட்சத்தை வங்கிக் கடனாக பெற அரசு வழிவகை செய்யும்.

இதையும் படிக்க : சேலத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு மரியாதையுடன் உடல் ஒப்படைப்பு!

யாருக்குத் தகுதி?

  • 21 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பால் கூட்டுறவுச் சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ஒரு கறவை மாடு வைத்திருந்து, கூட்டுறவுச் சங்கத்துக்குத் தொடர்ந்து பால் வழங்குபவராக இருக்க வேண்டும்.
  • சொந்தமாகவோ குத்தகைக்கோ குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
  • கால்நடைகளைப் பராமரிக்கப் போதுமான இடவசதி இருக்க வேண்டும்.
  • மொத்தப் பயனாளிகளில், 30 சதவீதம் பெண்களுக்கும், 18 சதவீதம் ஆதிதிராவிடர்களுக்கும், 1 சதவீதம் பழங்குடியினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாளொன்றுக்கு 17,500 லிட்டர் கூடுதல் பால்

ஒரு மாடு சராசரியாக நாளொன்றுக்கு 7 லிட்டர் பால் தரும் எனக் கணக்கிட்டால், 5 மாடுகள் கொண்ட ஒரு பண்ணையில் நாளொன்றுக்கு 35 லிட்டர் பால் கிடைக்கும். இதன்படி, 500 பண்ணைகள் மூலம் மாநிலத்தில் நாளொன்றுக்குக் கூடுதலாக 17,500 லிட்டர் பால் உற்பத்தியாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

கால்நடைத் திட்டங்களின் தொடர்ச்சி

ஊரகப் பெண்கள் 10,000 பேருக்கு விலையில்லாக் கறவை மாடுகள், ‘வெற்றி மகளிர்’ திட்டத்தின் கீழ் 30,000 பேருக்குத் தலா 5 ஆடுகள் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, கால்நடை வளர்ப்பு மூலம் கிராமப்புற வருமானத்தைப் பெருக்கும் அரசின் மற்றொரு முயற்சியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டின மாடுகளான காங்கேயம் புலிக்குளம், பர்கூர், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி அல்லது தோடா எருமை மாடு போன்ற நாட்டின மாடுகளை வளர்க்கும் பெண்களுக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Follow Us