தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது.. தொல்.திருமாவளவன்!
VCK Leader Thol. Thirumavalavan : கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படுவதாகவும், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் சட்டபூர்வ நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை இல்லை. தமிழக வெற்றி கழக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழக அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. தவெக எம்எல்ஏ மீது ஆட்சியர் புகார் அளித்து எத்தனை நாட்கள் ஆகிறது என்பதே முக்கியமாகும். இந்த பிரச்சனை தவெக ஆட்சியை கவிழ்க்க கூடிய அளவுக்கோ அல்லது ஆட்சியை இழக்க கூடிய அளவுக்கோ அழுத்தத்தை தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நம்பவும் இல்லை என்று தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் எதிர்க் கட்சிகள்
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்தான், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்திருந்தார்.
மேலும் படிக்க: அரசு ஆண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 15 நாள்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு அறிவிப்பு!
தவெக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்த புகாரை தொடர்ந்து, எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், ஐஜி காமினி விசாரணை கண்காணிப்பு அதிகாரியாகவும், திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர், அவரது நேர்முக உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் அருள் விக்னேஷ்
இதனிடையே, அருள் விக்னேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அறிவுறுத்தி அடிப்படையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!