AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு ஆண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 15 நாள்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு அறிவிப்பு! 

Parental Leave For Male Employees : தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்களது மனைவியின் மகப்பேறு காலத்தில் 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு ஆண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 15 நாள்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு அறிவிப்பு! 
முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Nov 2026 14:27 PM IST

தமிழகத்தில் அரசு  பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்குவது போல முதல் முறையாக திருமணமனமான அரசு ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு 15 நாட்கள் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் சுமார் ஓராண்டு விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், திருமணமான ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள்கள் மகப்பேறுகால தந்தையர் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தை பிறப்பதற்கு 15 நாட்கள் முன்னதாகவோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குளாகவோ இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்க்கு ஆதரவாகவும், குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் மற்றும் குழந்தை நலனை கருத்தில் கொண்டு 65 நாட்கள் மகப்பேறு விடுப்பு வருகிறது. இந்த நிலையில், குழந்தை பிறக்கும் முக்கியமான நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் உடல் மற்றும் மன ரீதியாக ஆதரவு வழங்கவும், குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பு இருக்கவும் அரசு ஆண்கள் பணியாளர்களுக்கு மகப்பேறுகால தந்தையர் விடுப்பு வழங்க வேண்டும் என்று ஆண் அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில், இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திருமணம் ஆன அரசு ஆண்  ஊழியர்களுக்கு அவர்களது மனைவியின் மகப்பேறு காலத்தில் உடன் இருந்து கவனிப்பதற்கு ஏதுவாக தந்தையர் மகப்பேறு கால விடுப்பு 15 நாட்கள் வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது ஆண் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us