AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தைப் பாராட்டிய சிரஞ்சீவி – நானி…!

Actors Chiranjeevi and Nani praised Aakasamlo Oka Tara movie | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஆகாசம்லோ ஓகா தாரா. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நானி பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தைப் பாராட்டிய சிரஞ்சீவி – நானி…!
ஆகாசம்லோ ஓகா தாராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Nov 2026 12:26 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் தெலுங்கு மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஆகாசம்லோ ஓகா தாரா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பார்த்த பிரபலங்களும் தற்போது தங்களது வாழ்த்துகளை தெரிவித்து  உள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆகாசம்லோ ஓகா தாரா படத்தைப் பார்த்துவிட்டு தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ள நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நானி இருவரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துல்கர் சல்மானின் படத்தைப் பாராட்டிய சிரஞ்சீவி – நானி:

அதன்படி நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நான் ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் என்னை ஆழமாகப் பாதித்தது. இத்தகைய எழுச்சியூட்டும் கதையை இவ்வளவு உறுதியுடனும் திறமையுடனும் திரைக்குக் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பவன்சதினேனியை நான் குறிப்பாகப் பாராட்டுகிறேன். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் நான் குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.

நடிகர் நானி வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, ‘ஆகாசம் லோ ஒகா தாரா’ (Aakasam lo oka taara) மிகவும் அழகான ஒரு படைப்பு. மனதைத் தொடும் அற்புதமான திரைப்படம்! துல்கர் சல்மான் செய்ததைப்போல, வேறெவராலும் இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது. சத்வீரவல்லி, என்னவொரு அருமையான அறிமுகம்! ‘கல்பனா’ கதாபாத்திரத்திற்கு உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Also Read… யாரையுமே நம்பாத.. லக்ஷ்மி பிரியாவுக்கு குடும்பம் கொடுத்த எச்சரிக்கை – பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

நடிகர் நானி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் 46-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Follow Us