இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!
AR Rahman talks about Inji Vellam movie song | தமிழ் சினிமாவில் இசையாமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இஞ்சி வெல்லம் (Inji Vellam). இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பர்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இறுதிப் படமான தக் லைஃப் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத காரணத்தால் இந்தப் படத்தின் வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கதில் ரொமாண்டிக் ட்ராமா வெளியாக உள்ளதும் அவரது ரசிகர்களிடையே அதிக அளவில் மகிழ்ச்சியை ஏறுபடுத்தி உள்ளது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 29-ம் தேதி ஜனவரி மாதம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று வெளியாக உள்ளது.




இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசிய ஏஆர்.ரஹ்மான்:
இந்த இஞ்சி வெல்லம் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று 25-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல் பாடலான ஆச்சி ஆச்சி வெளியாக உள்ளது. இந்த இஞ்சி வெல்லம் படம் குறித்தும் அந்த முதல் பாடல் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக் பாஸில் முதல் ஆளாக வந்த வினோத் பாபு பேமிலி – மனைவி கொடுத்த அட்வைஸ்!
இஞ்சி வெல்லம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Puyal @arrahman about #AachiAachi 🎵
Oye oye oye from tomorrow ⚡️
#ManiRatnam @MadrasTalkies_ #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @Chaithra_Achar_ @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia @homescreenent @sst_casting @gopiprasannaa @SureshChandraa @DoneChannel1
#InjiVellamFromJan29
— Lyca Productions (@LycaProductions) November 24, 2026
Also Read… Vetri Maaran: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!